ஒரு நாள் விக்கிமூலம் பயிற்சிப்பட்டறை

classic Classic list List threaded Threaded
1 message Options
Reply | Threaded
Open this post in threaded view
|

ஒரு நாள் விக்கிமூலம் பயிற்சிப்பட்டறை

balaji
வணக்கம்,

கடந்த திங்களன்று (24.02.2020) திவ்யாவும் நானும் சென்னை SSSS கல்லூரியில்
தமிழ் விக்கிமூல அறிமுக பயிற்சிப் பட்டறை செய்தோம்.

*அதன் சுருக்கம்:*

சென்னை, தி. நகரில் உள்ள ஸ்ரீ சங்கர்லால் சுந்தர்பாய் ஷசுன் ஜெயின் மகளிர்
கல்லூரியில் 24 பெப்ரவரி 2020 அன்று ஒரு நாள் தமிழ் விக்கிமூலம் பயிற்சி
பட்டறை நடந்தது. பயிற்சியில் சுமார் 70 மாணவர்களும் 5 பேராசிரியர்களும்
கலந்துகொண்டனர்.
இந்நிகழ்ச்சியை கணியம் அறக்கட்டளை சார்பில் shrinivasan ஏற்பாடு மற்றும்
ஒருங்கிணைப்பு செய்திருந்தார்.
பயிற்சிக்கு முன்பே மாணவர்களை விக்கியில் பயனர் கணக்கு இல்லாதவர்களை பயனர்
கணக்கு தொடங்கக் கூறிப்பட்டது. விக்கிமூல உதவிக் காணொளிகளையும் பார்த்து
வருமாறு அறிவுறுத்தப்பட்டது.
பயிற்சி நாள் அன்று மாணவர் அனைவரும் கணினி அறைக்கு வந்து கணினியில் புகுபதிகை
செய்து அமர்ந்திருந்தனர். திவ்யா அவர்கள் விக்கிமூலத்தைப் பற்றி ஓர் அறிமுக
உரையை ஆற்றினார். பின்னர், 11.30 மணி அளவில் ஒவ்வொரு மாணவரும் ஒவ்வொரு நூலை
தேர்தெடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர். பின்னர் அனைவரும் ஒவ்வொரு பக்கமாக
மெய்ப்பு செய்யத் தொடங்கினர். அப்பொழுது அவர்களுக்கு ஏற்பட்ட பல சந்தேகங்கள்
மற்றும் சிக்கல்களை பாலாஜி மற்றும் திவ்யா ஒவ்வொருவரிடமும் சென்று கூறி தெளிவு
செய்தனர்.

மாணவர்கள் மிகவும் ஆர்வமுடன் பல விதமான சந்தேகங்களை கேட்டு மெய்ப்பு செய்து
வந்தனர். பின்னர் நிகழ்ச்சி முடியும் முன் அவர்களிடம் இருந்து பின்னூட்டம்
பெறப்பட்டது.

*நிகழ்ச்சி புள்ளிவிவரம்:*

*விவரம்*       *  எண்ணிக்கை*
புகுபதிகை செய்யா தொகுப்புகள் (அ) 36
புகுபதிகை செய்த தொகுப்புகள் (ஆ) 696
பயிற்சிப் பட்டறையில் மொத்த தொகுப்புகள் (அ+ஆ) 732
பதிகை செய்து தொகுத்த மொத்த பயனர்கள் 56
மொத்தம் தொகுக்கப்பட்ட தனித்த பக்கங்கள் 423

விரிவான தகவலுக்கு: https://ta.wikisource.org/s/96iw
<https://ta.wikisource.org/s/96iw>

அன்புடன்,
பாலாஜி <https://ta.wikisource.org/wiki/User:Balajijagadesh>
_______________________________________________
Wikita-l mailing list
[hidden email]
https://lists.wikimedia.org/mailman/listinfo/wikita-l